Story Preview:
“ராஜி,
நான் வளைகாப்புக்கு அம்மா வீட்டுக்கு போயிடுவேன். வர ஆறு மாசமாகும். அதுவரைக்கும் வீட்டை
நீதான் பார்த்துக்கனும். நைட்டுக்கு மட்டும் அவருக்கு சாப்பாடு பண்ணி கொடுத்துடு. பகல்ல
கடையில சாப்பிட்டுக்குவாரு. கொஞ்சம் சிரமம் பார்க்காம கவனிச்சிக்கடி. உன்னை நம்பித்தான்
போறேன்..!!” என்று திவ்யா சொல்லும் போதே, என் அடிவயிற்றில் அமிலம் சுரக்க ஆரம்பித்தது.
ஒரு நாள், இரண்டு நாளென்றால் சமாளிக்கலாம். ஆறு மாசம் சேகருடன் ஒரே வீட்டில் தனியாக இருக்க வேண்டும்..!! இது சரியா வருமா..?
இரவெல்லாம்
தூக்கம் வரவில்லை.
திவ்யா என் நெருங்கிய தோழி. பணக்கார வீட்டுப் பெண். ஏழையான என்னிடம், எந்த பாகுபாடும் இல்லாமல் அன்பை வாரி இறைத்தவள். என் படிப்பு முடிந்ததும் அவளே சென்னையில் ஒரு வேலையும் வாங்கிக்கொடுத்து, என்னையும் அவள் வீட்டிலேயே தங்கச் சொல்லிவிட்டாள்.
நான் இங்கே
வந்து நான்கு மாதம் ஆகிறது. முதல் இரண்டு மாதம் எந்த பிரச்சினையும் இல்லை. அதன் பிறகுதான்
திவ்யாவின் கணவன் சேகரின் சுயரூபமே எனக்கு தெரிய ஆரம்பித்தது.